தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள் 804 பெண்கள் ஆக மொத்தம் 2694 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர்.
அவர்களுக்கான அடிப்படை காவல் பயிற்சி 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில்
04/12/24 தேதி முதல் துவங்ப்பட உள்ளது.அடிப்படை பயிற்சியின் போது புதிதாக காவல் துறைக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஒழுக்கம், கவாத்து பயிற்சி சட்ட வகுப்பு பயிற்சி துப்பாக்கி சுடுதல் தற்காப்பு கலைகள் யோகா ஓட்டுனர் பயிற்சி போன்ற பலவிதமான பயிற்சிகள் திறம்பட வழங்கப்பட உள்ளன.அப்பயிற்சிகளை வழங் இருக்கும் சட்டப் போதகர்கள் மற்றும் கவாத்து போதகர்களூக்கு 25/11/24 தேதி முதல் 30/11/24 தேதி வரை பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மதுரை காவல் பயிற்சி பள்ளியில் துறை சார்ந்த சிறப்பு விரிவுயாளர்களையும் அனுபவமும் திறமையும் மிக்க காவல் அதிகாரிகளை கொண்டு நடைபெறுகிறது. காவல்துறை தலைவர் (பயிற்சி) திருமதி M.V.ஜெயகௌரி IPS அவர்கள் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து காவல் பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மதுரை காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சியாளர்கள் தங்கும் இடம் உணவு விடுதி கவாத்து மைதானம் வகுப்பறைகள் ஆகியவற்றை நேரடியாக பார்வை இட்டார். மதுரை காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர் திரு.உண்ணிகிருஷ்ணன் அவர்களும், துணை முதல்வர் திரு. மாரியப்பன் அவர்களும் உடனிருந்தனர்.
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி