கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்த கனமழை காரணமாக உத்தமபாளையம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, காக்கில்சிக்கியன்பட்டி, கோவிந்தன்பட்டி, கோம்பை, தேவாரம், மார்க்கையன்கோட்டை, சின்னமனூர், சுற்றுவட்டள பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது தற்பொழுது முல்லை பெரியார் அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் உத்தமபாளையம் முல்லை பெரிய ஆற்றில் ஆக்ரோஷமாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
இதனால் அப்பகுதியில் ஆழமான பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது…
நீண்ட நாட்களுக்கு பிறகு முல்லைப் பெரியாற்றில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவது விவசாயிகள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…