மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணிகளில் ஒரு பகுதியாக தேவர் சிலை இடதுபுறம் சங்கீத் பிளாசா ஹோட்டல் மற்றும் பணங்கள் சாலை சந்திப்பில் புதிதாக பில்லர் கட்டுவதற்கான பணிகள் நடக்க உள்ளது .
இதையொட்டி இன்று நவம்பர் 20ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மதுரை நகர போலீசார் தெரிவித்துள்ளனர் நத்தம் ரோடு அழகர் கோவில் ரோட்டில் இருந்து வரும் டவுன் பஸ், கார்கள், டூவீலர்கள் அவுட்போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து வலது புறம் திரும்பி ஹோட்டல் நார்த் கேட்டு கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏவி பாலம் செல்ல வேண்டும் காந்திநியூசியம் ரோட்டிலும் செல்லலாம்
மாட்டுத்தாவணியில் இருந்து வரும் வாகனங்கள் கே.கே. நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்
நத்தம், அழகர் கோவில் ரோடு வழியாக ஆரப்பாளையம் பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கனரக, வணிக பயன்பாட்டு வாகனங்கள் அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே கே நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு பனங்கல் ரோடு கோரிப்பாளையம் சந்திப்பு, ஏவி பாலம் வழியாக வந்து கீழ வெளி வீதி, யானைகல், வடக்கு மாரட் வீதி செல்ல வேண்டும்
கோரிப்பாளையத்தில் இருந்து தத்தனேரி செல்லும் அனைத்து வாகனங்களும் கோரிப்பாளையம், மீனாட்சி கல்லூரி ரோடு, வைகை வடகரை ரோடு, குமரன் ரோடு வழியாக செல்லூர் கபடி ரவுண்டானா செல்ல வேண்டும்
செல்லூர் கபடி ரவுண்டானா முதல் புது பாலம் இரக்கம் வரை மேளக்கார தெரு பகுதியில் கான்கிரீட் பில்லர்கள் உத்திரங்கள் அமைக்கும் பணி நடக்க உள்ளது எனவே இங்கும் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
புது பாலம் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த யானைகள் பாலம் இறக்கத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வரிசையாக ஒரு வழி பாதையாக செல்ல அனுமதிக்கப்படும் வழக்கம்போல் பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் தத்தனேரி பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம் எம் லாட்ஜ் சாலை, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்ணன் கோவில் சந்திப்பு, கோகுலே ரோடு, ₹ஐஓசி ரவுண்டானா வழியாக வந்து நத்தம் ரோடு அழகர் கோவில் ரோடு மாட்டுத்தாவணி செல்ல வேண்டும்
பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் சிம்மக்கல் தைக்கால் தெரு, எம்ஜிஆர் பாலம், வைகை வடகரை ரோடு, குமரன் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக செல்லலாம்
பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து தெப்பக்குளம் செல்லும் இருசக்கர வாகனங்கள் சிம்மக்கல் தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை பாலம், வலது புறம் இரக்கம், வைகை தென்கரை ரோடு குருவிக்காரன் சாலை சந்திப்பு வழியாக செல்லலாம்
மேலும் அண்ணாநகர், மாட்டுத்தாவணி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் சிம்மக்கல் தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை பாலம் வலது புறம் இறக்கம் வைகை தென்கரை ரோடு, ஓபுளா படித்துறை பாலம், குருவிக்காரன் சாலை ரோடு பாலம் வழியாக நகரில் வடபகுதிக்கு செல்லலாம்
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி