29-07-23 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பனியிலிருந்த காவலர் மரணம் அடைந்த சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபாளையத்தில் உள்ள துணை போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இரவு பணிக்கு சின்னமனூரைச் சேர்ந்த தலைமைக் காவலர் அபு கானி (44),
இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருகிறார்.
இரவு நேர பணிக்கு வந்த காவலர் அபு கனி மற்ற காவலர்களுடன் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது தனக்கு திடீரென மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளார்.
உடன் பணியில் இருந்த காவலர்கள் அபுகனிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கூறிவிட்டு உடனே அவரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அபுகனி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் பணியாற்றி வந்த இடத்தில் பணியின் போது காவலர் உயிரிழந்த சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊரான சின்னமனூருக்கு கொண்டுவரப்பட்டு மசூதியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை செலுத்தி அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.