சென்னை பெங்களூர் சாலையில் லாரியும் பேருந்தும் மோதி விபத்துக்கு உள்ளனது. பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை வேலப்பன்சாவடி அருகே இன்று (ஜூலை 29) அதிகாலை, பேருந்துயும் லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்,
2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த ஏசி வசதி கொண்ட பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியது.
இரு வாகனங்களும் மோதியதில் தீப் பற்றியது.
பேருந்தில் இருந்த 22 பயணிகள் பயணித்து வந்தனர். அவர்கள் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் உயிர் தப்பினர்;
பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.