இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் (12.10.2024) உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சுதாகர் அவர்கள் மற்றும் போலீசார் தலைமையில் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 நபர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

