சிவகாசி அருகே பார் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் ஜோதி (56). இவர் அதே பகுதியில் பாரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ஆலாவூரணியை சேர்ந்த மெட்ராஸ்குமார் (42) பாரில் மது அருந்த வந்துள்ளார். அப்போது அங்கிருந்து ஊழியர்களிடம் மெட்ராஸ் குமார் தகராறு செய்துள்ளார். இதை மேலாளர் ஜோதி தட்டிக்கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு காலி மதுபாட்டிலை எடுத்து காட்டி மெட்ராஜ்குமார் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் மெட்ராஸ் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.