
தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் பகவதி அம்மன் கோவில் நடுத் தெரு வசித்து வரும் ராஜபாண்டி (45) பால்ச்சாமி அவர்கள் சுமார் மதியம் 3.30 அளவில் அவரின் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கால் தவறி அவர் அருகாமையில் உள்ள இபி மெயின் டிரான்ஸ்பார்மில் விழுந்தார்.அவரை மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார் உடனே அங்கிருந்து அவருடைய மனைவி மற்றும் பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது .சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.சின்னமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்த காவல் துறையினர்.வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இச்சம்பவித்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.