தமிழகத்தில் கீழ்நிலைக் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தாங்கள் பணி புரியும் மாவட்டத்தில் அரசு பேருந்தில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
ஸ்மார்ட் அடையாள அட்டை பெற வேண்டியவர்கள் தொடர்பான தகவலை வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் டி.ஜி.பி., தலைமையில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்
ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி கள் டி.எஸ்.பி., ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 1,21,500 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.இவர்களில் 10 சதவீதத்திற்கு மேல் மகளிர் போலிசார் அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து இலவச பயணம் மேற்கொள்ளலாம் நவீன அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 2021 ம் ஆண்டு அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட்டு மாதம் வெளியிடப்பட்டும்
காவல் துறை அதிகாரிகளுக்கு ஸ்மார்ட் கார்ட்டு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு ஸ்மார் கார்டு வழங்குவதற்கு மாவட்ட எஸ்.பி க்கள் மாநகர காவல் ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இது தொடர்பான விபரங்களை டிசம்பர் 16 க்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி