கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா.இராஜாராம் அவர்களின் அறிவுரைப்படி, கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்கள் வழிகாட்டுதலின்படி கடலூர் பேருந்து நிலையத்தில் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


