தேனி சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டின மலைமாடுகளைப் பாதுகாப்பதற்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் பதிவு செய்யப்பட்ட இனமாக அங்கீகரிக்கும் முயற்சியாகவும் அறிவியல் அடிப்படையிலானப் பராமரிப்பு மற்றும்இனவிருத்தி முறைகளை மலைமாடுகளை கற்பிக்கவும்.வளர்ப்பவர்களிடம் மற்றும் மக்களிடையே நாட்டின மாடுகளின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமான கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி மண்டல அளவிலான மலை மாடுகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது,இந்நிகழ்ச்சியில் தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரிச்சர்ட் ஜெகதீசன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜ் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அன்பழகன் கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக அலுவலர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,