வேட்டவலத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் முகாம்களை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் மாண்புமிகு கு.பிச்சாண்டி அவர்கள் இன்று 05-08-2023 காலை 10 மணியளவில் சென்மேரிஸ் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து இத்திட்டத்தின் நன்மைகளை பயனாளிகளுக்கு எடுத்துக்கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு.ஆராஞ்சி ஆறுமுகம், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன்,நகரக் கழக செயலாளர் அண்ணன் திரு.ப. முருகையன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதிகள் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய பிரிதிநிதிகள், வார்டு செயலாளர்கள், மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.