மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ அல்லது தொங்கி கொண்டோ செல்லாத வகையிலும் முறையான பேருந்து பயணத்தை மேற்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று 24/03/25 போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.செல்வின் மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுரேஷ் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் . பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கும் பொழுது படிக்கட்டில் தொங்கி கொண்டோ படிக்கட்டுகளில் நின்று கொண்டோ செல்லக்கூடாது என்றும் அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார ரீதியான, உடல் ரீதியான, மன ரீதியான விபரீதங்கள், மற்றும் ஆபத்துகள் குறித்தும், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. செல்வின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் ஆகீயோர் எடுத்துரைத்து விழிப்புணரவை ஏற்படுத்தினர்


மாவட்ட செய்தியாளர் அருள் ஜோதி