தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சின்னமனூர் வட்டாரம் ஒருங் கினைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம். சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் மீனாட்சி சந்தரேஸ்வரி வரவேற்பு உரை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமை உரையாற்றினார்.தேனி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன்
சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் N.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பித்தனர் உடன் நகர்மன்ற துணை தலைவர் முத்துக்குமார் மற்றும் அங்கன் வாடி உழியர்களும் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.