❇️✅கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே உள்ள கோரிபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் ஓசூர் பேடரப்பள்ளி காமராஜர் நகர் பகுதியில் தங்கி ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 28-ந் தேதி நிறுவன வளாகத்தில் வைத்திருந்த இவரது மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.
அது குறித்து விஜய் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசரணையில், அதை திருடியது ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்த சந்தோஷ் (30) அவரை போலீசார் கைது செய்து மேலும் மடிக்கணினி மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
❇️✅செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில், செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட கோகுல் ராம் (19) என்ற மாணவன், 5ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை – போலீசார் விசாரண
❇️✅சென்னை மாதாவரம் கொசப்பூர் பகுதியில் 19 வயது இளைஞர் பங்கிங்காம் கால்வாயில் விழுந்து மாயம்.
நண்பர்களுடன் அமர்ந்திருந்த சந்தோஷ், கால்வாயில் தண்ணீரில் கால் வைத்ததும் வழுக்கி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.
15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரரகள் அவரை தேடி வருகின்றனர்
❇️✅சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகள். மாடுகள் நடமாட்டத்தால் திணறும் வாகன ஓட்டிகள். நடந்து போக அச்சப்படும் பொதுமக்கள்.
❇️✅திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
❇️✅சென்னை
பெசன்ட் நகர் கடற்கரையில் சோலார் தகடு பொருத்திய பைபர் படகு கரை ஒதுங்கியது. மீனவர்கள் அளித்த புகாரை அடுத்து கடலோர காவல்படை விசாரணை
❇️✅தூத்துக்குடி பண்டாரம் பட்டி மேல தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 27). இவர் பால் வியாபாரி. பால் வியாபாரத்தை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்ற போது பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் அவர் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நந்தகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை
❇️✅சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்துள்ளதால் பயணிகள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.
❇️✅கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லனகுப்பம் அடுத்த ராகிமானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வேனை சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ எடை அளவிலான 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், வேன் டிரைவரான கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விக்ரம்குமார் என்பவரை கைது செய்தனர்.
❇️✅திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் மாநில அரசின் பல்வேறு பணிகளுக்கான கட்டுமான பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார்
❇️✅திருச்சியில் பயிர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கும் வைரஸ் மற்றும் அதன் தொடர்பான நவீன ஆராய்ச்சி மற்றும் சர்வதேச கருத்தரங்கம் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது
❇️✅தென்காசி ஆலங்குளத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு சுய வேலை வாய்ப்பு மூலம் தையல் பயிற்சி பெற்ற 35 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் பயிற்சிக்கான சான்றிதழை ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் என்று வழங்கினார்
❇️✅தேனி மாவட்டம் வீரபாண்டியில் மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாட்டின மீன் குஞ்சுகளை முல்லை பெரியாற்றில் விடும் நிகழ்வு இன்று நடந்தது.
❇️✅புதுவையில் போலி ஆவணங்கள் தயாரித்து 3 வாடிக்கையாளர்களின் ஷேர் மார்க்கெட் முதலீட்டு பணம் ரூ.45.67 லட்சத்தை மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி மிஷன் வீதியில் பிரபல தனியார் ஷேர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது