வரதட்சணை கொடுமை தொடர்பான FIR-ல் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளின் FIR-ல் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்.
“குடும்ப உறுப்பினர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்பதால் அவர்களை ‘மற்றும் பலர்’ என குறிப்பிட வேண்டும்”