சென்னை: வரதட்சணை கொடுமை புகார் பதிவு தொடர்பாக போலீஸ் டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார்களை பதிவு செய்யும் போது, முதல் தகவல் அறிக்கையில் கணவர் குடும்பத்தினர் பெயரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வழக்குகளில் தேவையின்றி போலீசார் கைது நடவடிக்கைக் கூடாது. அதனை நீதிபதிகள் அங்கீகரிக்கக் கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது