தேனி-நவ.04:போடி திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, கணவரை இழந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் ராமசாமி 24, என்பவருடன் வசித்து வந்தார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமசாமி காணாமல் போய் விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போடி போலீசார் மாயமான ராமசாமியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு க.விலக்கு- வருசநாடு செல்லும் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ராமசாமியை க.விலக்கு காவல்துறையினர் உதவியுடன் பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விடப்பட்டார். குணமடைந்த பின்பு போடி துணைக் கண்காணிப்பாளர் பெரியசாமி,காவல் ஆய்வாளர் கேத்ரின் மேரி, சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் அவர்களுக்கு ராமசாமி என்பவர் போடி அருகே காணாமல் போன பரமேஸ்வரி மகன் என்பது தெரிய வந்தது.உடனே ராமசாமியை அவரது தாயார் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்து வழக்கினை முடித்து வைத்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.