செயற் பொறியாளர் பதவி உயர்வு பெற்று செல்லாமல் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வரும் உதவி செயற் பொறியாளர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேனி, போடி உள்ளிட்ட நான்கு தாலுகாக்களின் பொதுப் பணி உதவி செயற் பொறியாளர் ரமேஷ் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு செயற் பொறியாளர் பதவி உயர்வு பெற்றும் செல்லாமல் தொடர்ந்து தேனி மாவட்ட மஞ்சள் நதி, சக்கிலிச்சிகுளம், கருவங்குளம், செங்குளம், கேசவபுரம் குளம்,
உள்ளிட்ட 62 கண்மாய்களில் கனிம வள கொள்ளை நடத்தி அதன் மூலம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தேனி மாவட்டத்தில் நடைபெற்று 62 கண்மாய்களின் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்