‘‘தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில் மக்களோடு பயணிப்போம்! என்றும், பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்’’ என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலை வாணர் அரங்கில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ‘சமத்துவ நாள்’ விழாவில் உரையாற்றும் போது கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (14.04.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் ஆற்றிய உரை வருமாறு:–
இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கக்கூடிய பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
“அடிநாள் தொட்டு அடிமைகளாய், தொழும்பர்களாய், ஆதிக்க சாதிகளின் சவாரிக் குதிரைகளாய், தாழ்த்தப்பட்டோர் அல்லலுற்று தணலிலே மெழுகாய் தவிதவித்துக் கிடந்த நிலை மாற்றிட தகத்தகாய சூரியனாய் எழுந்தான் ஒருவன், அந்த தகைசார்ந்த அறிஞனுக்கு பெயர்தான் அம்பேத்கர் அவர்கள்!
மாண்டிடும் புழுக்களாம் மனிதர்களை காத்து, அவர் மீண்டிட போர்க்கொடி உயர்த்திய மேலோன்!!புயலாய் சீறி, பூகம்பமாய் குலுங்கி, புரட்சி செய்த புதிய புத்தன்தான் அம்பேத்கர்!” என்று தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை வணங்கி நான் என்னுடைய உரையை தொடங்குகிறேன்!
வரலாற்றை மாற்றி எழுதிய அம்பேத்கரின் பிறந்தநாள்!
இன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! இந்தச் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை குற்றங்கள், உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி, வரலாற்றை மாற்றி எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்! அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளை, சமூகநீதி நாளாகவும், புரட்சி யாளர் அம்பேத்கர் பிறந்த இந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்!
இன்று காலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம்! சமத்துவத்தை நோக்கி நம்முடைய சமூகம் வேகமாக நகரவேண்டும் – இந்த மண்ணில் இருக்கின்ற ஒவ்வொருத்தருடைய உள்ளத்திலேயும் மாற்றத் திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்று தான், இந்த முன்னெடுப்பை எடுத்திருக்கிறோம்!
புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்திப் பிடித்து கொண்டாடும் இயக்கம்தான், திராவிட இயக்கம்! அவர் எழுதிய ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை 1930-ஆம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்! அதுமட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை, அவர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கின்ற மராத்வாடா பல்கலைக்கழகத்துக்குவைக்கம் போராட்டம் நடத்திய காலகட்டத்தில், இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் நம்முடைய முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்கள்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்தவர்!
இந்த பாதையில்தான், புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டு இருக்கிறோம்! சமூகநீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள், மக்களவையில் இரண்டு முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்றைக்கு நம்முடைய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய இதயமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவுக்கு வருவதற்கு முன்னால், சைதாப்பேட்டையில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்.சி.ராஜா அவர்கள் பெயரில் அமைந்திருக்கும் மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் முதலாவது உறுப்பினர் எம்.சி.ராஜா அவர்கள்.அவர்தான் பட்டியலின மக்களின் துயரங்களை முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றவர்.
அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் மறைவுக்குப் பிறகு, சென்னை ஆதிதிராவிடர் மகாஜன சபையைச் சீரமைத்து நடத்தியவர். நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமான ஒருவர்.
இலட்சியத்துடன் படித்து முன்னேற
எம்.சி. ராஜா பெயரில் விடுதி!
1927-ஆம் ஆண்டே ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர். 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அத்தகைய பெருந்தலைவரின் பெயரால் அமைந்திருக்கின்ற அந்த விடுதி, இலட்சியத்துடன் படித்து முன்னேற பாடுபட்டவர்களுக்கான இடமாக இருந்திருக்கிறது!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். இந்த மேடையில் நம்முடைய சகோதரர் திருமா வளவன் அவர்கள் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கிப் படித்தவர் தான். அதை திறந்து வைத்துவிட்டு அந்தக் கட்டிடத்தை சுற்றிப்பார்த்தோம். சுற்றிப்பார்த்த நேரத்தில் தன்னையே மறந்து அவர் சொன்னார் – இங்கே தங்கி, மீண்டும் ஒரு ஐந்து வருடங்கள் படிக்கலாம் போல தோன்றுகிறது என்று சொன்னார். இன்றைக்கு எல்லாருக்கும் அரசியல், சமூக அறிவியல் பாடம் சொல்லித் தருகின்ற சிந்தனையாளராக, கொள்கை பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்!
விரைவில் விடுதி முகப்பில் எம்.சி.ராஜா மார்பளவு சிலை!
இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைத்திருக்கின்ற இந்த நாளில், அந்த விடுதியில் முகப்புறத்தில் பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடும், பெருமையோடும் நான் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கிறேன்.
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில், எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறோம்! அதனால்தான், சென்னையில் இருக்கின்ற பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது.
அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக நிச்சயமாக இருக்கும்! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், தந்தைப் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் ஒருங்கிணைந்தவளர்ச்சிக்கான
