தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ஆனது சிறப்பாக நடைபெற்றது, இதில் குறிப்பாக சின்னமனூர் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களும் ஒன்று சேர்ந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வந்து சின்னமனூர் முக்கிய வீதிகளில் உலாவரும், தேனி மாவட்டத்திலேயே மிகப் பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தி விழாவானது சின்னமனூரில் தான் சிறப்பாக ஆண்டுதோறும் நடந்து வருவது வழக்கம் அதனை ஒட்டி இந்த ஆண்டு 38வது ஆண்டை முன்னிட்டு இ மொத்தம் 180க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் வான வேடிக்கை முழங்க, பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் எடுத்துவரப்பட்டது, பின்னர்மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் விநாயகர் சிலையானது கரைக்கப்பட்டனர், இதனால் சின்னமனூர் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது,பொதுமக்களின் பாதுகாப்பு நலன் குறித்து சின்னமனூர் காவல் நிலையம் சார்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களும், தீயணைப்பு துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுபாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,