மதுரை காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி பெட்டகம் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு இலவச தலைக்கவசமும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பேசும்போது; வாகனஓட்டிகள் சாலையில் செல்லும் போது சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், ஆண்டுதோறும் 60% சாலை விபத்துகள் தலைக்கவசம் அணியாத செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் எனவும், சாலையில் பயணிக்க கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.