இன்று (11.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப.,
அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.நந்தகோபால் (ACTU) அவர்கள் தலைமையில் கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சைபர் கிரைம் விழிப்புணர் நிகழ்ச்சியில்
இணைய வழி குற்றங்களான Financial frauds , OTP frauds, EB bill payment frauds, Scholarship frauds, Investment frauds, Loan App frauds, Job Frauds, Part time Job frauds போன்ற குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு குறித்தும், CyberHelpline-1930 குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும் , பெண்களுக்கான உதவி எண்-181, குழந்தைகளுக்கான உதவி எண்-1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தியாகராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.சிவகுமார், திருமதி.சித்ரா, சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார், ஆசிரியர்கள் மற்றும் 250 மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.