கடந்த 18/09/24 புதன் கிழமை மதுரையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சார்பாக மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி. S.வனிதா அவர்களது தலைமையில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. செல்வின், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ.தங்கமணி, நந்தகுமார், ரமேஸ்குமார், கார்த்திக், தங்கப்பாண்டி, சுரேஷ், கனேஷ்ராம், பஞ்சவர்ணம், ஷோபனா, பூரணகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பொது மேலாளர் திரு.மணி, உதவி மேலாளர் ( தொழில் நுட்பம்) மாரிமுத்து, பூமிநாதன் பசுமலை பயிற்சி மையம், அசோக் புறநகர் கிளை P.சௌந்திர பாண்டியன் DI, N.ராமமூர்த்தி DI, p.சீனிவாசகண்ணன் DI. ஆகியோர்கள்
இணைந்து மதுரை தெப்பக்குளம் சிக்னல் அருகே காமராஜர் கலையரங்கம் மகாலில் அரசு போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விபத்தில்லா தமிழகம் அமைய விழிப்புணர்வு முகாம் நடத்தினர்
இதில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S. வனிதா அவர்கள் விபத்துக்கள் குறித்து பேசுகையில் பொதுவாக விபத்துக்கான காரணங்கள் பொறுமையின்மை அவசரம் சகிப்பு தன்மையின்மையே காரணமாக உள்ளது.
வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் சைடு கண்ணாடியை நன்கு கவனித்து பின்னால் வரும் வாகனங்ளை கவனத்தில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டுமென்றார் பெரும்பாலான விபத்துக்கள் பிளைண்ட்டு ஏரியா என கருதப்படும் வாகனங்களின் முன் பகுதிகளிலும் வாகனங்கள் புறப்பட்ட பின் வேகமாக வந்து பின் சைடுகளில் ஏறுவதாலும் ஏற்படுவதாகவும் கூறினார் இதில் நடத்துனர்களின் பங்கு முக்கியமாக பயணிகளில் வயதானவர்கள் படியிலிருந்து இறங்கும் போது பொறுமையாக அவர்களை இறக்கிவிட்டும் ஓட்டுனர்கள் சைடு கண்ணாடியை கவனித்து வாகனத்தை இயக்குவதை போல நடத்துனர்களும் பொறுப்புடன் நடந்து கொள்வதோடு சமூக அக்கரையுடன் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் வாகனங்களை இயக்க ஆரம்பிக்கும் முன் விபத்தில்லா பயணத்தை கடைபிடிப்போம் என்ற ஒரு தன்னம்பிகையுடன் பயணத்தை துவங்க வேண்டுமென்றார்.
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி