பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அவர்கள பணியை பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 100 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்ள்ளது.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த உதவி ஆணையர் திரு. சந்திரசேகர் அவர்கள் நுண்ணறிவு பிரிவு, மற்றும் மதுரை விளக்குதூண் B 1, காவல்நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மகேஸ்குமார் அவர்கள் ஆகியோர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.