இன்று 29.11.24 ம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள சாய்ராம் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் 18ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சேதுமணிமாதவன் அவர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் இக்காலத்தில் போதைப் பொருள் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாகாமல் எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றியும் போதைப் பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் குழந்தைகள் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் இருக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது மற்றும் விளையாட்டுகள் உடற்பயிற்சியின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து பள்ளிகள் கல்லூரிகளில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவது பற்றியும் அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் பெற்றோர்கள் இக்குழுவில் இணைந்து இளைஞர்களின் நலன் மற்றும் போதை பழக்கத்திற்கு குழந்தைகள் செல்வதை தடுக்க காவல்துறைக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் மதுவிலக்குக் அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கலந்துக்கொண்டனர்.
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி