சென்னை: திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, தென்காசி, திருவாரூர் மாவட்ட எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் ஆகியோருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வருண்குமார் திருச்சி சரக டி.ஐ.ஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டிஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி எஸ்.பியாக ஸ்டாலின், கடலூர் எஸ்.பியாக ஜெயக்குமார், திருச்சி எஸ்.பியாக செல்வநாகரத்தனம், தென்காசி எஸ்.பி-யாக அரவிந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.