மதுரை மாவட்ட நிர்வாகம், கலால் துறை, மதுரை மாநகர் காவல்துறை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து போதையில்லா தமிழகம் விபத்தில்லா மதுரை என்பதனை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட கலால் உதவி ஆணையர் ராஜகுரு மாநகர காவல் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சேது மணி மாதவன், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, ரெட் கிராஸ் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் அனிதா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகர காவல் துறை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு.சேது மணி மாதவன் பேசுகையில் மதுரை மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் சீரிய முயற்சியினால் மதுரை மாவட்டத்தில் போதை பொருள்பயன்பாடுபெருமளவு தவிற்கப்பட்டு வருகிறது. மதுரை எப்போதும் கலாச்சாரத்திற்கும் வாழ்வியலுக்கும் பல்லாயிரம் ஆண்டு காலம் தொட்டு சிறந்து விளங்கி வருகிறது. போதைப் பொருளை மாணவர்கள் பயன்படுத்த கூடாது மற்றவர்களை பயன்படுத்த விடவும் கூடாது தங்கள் பகுதிகளில்
ஏதேனும் போதைப் பொருள் விற்பது தெரிந்தால் மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்

முடிவில் மதுரை மாவட்ட கலால் துறை தாசில்தார் ஆனந்தி அவர்கள் நன்றி கூறினார்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் காவல்துறையினர் ரெட் கிராஸ் அமைப்பினர் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அருள் ஜோதி