செங்கோட்டை வம்பளந்தான் முக்கை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலையை காரில் கடத்தி வந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்தவர்களை வாகனத்துடன் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லிங்கராஜ் என்பவர் மீது ஏற்கனவே இதே போன்ற வழக்கு இருந்ததால் தொடர்ச்சியாக லிங்கராஜ் என்பவர் இதே போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு . V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. K.S. பாலமுருகன் அவர்களால் மேற்படி நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செங்கோட்டை காவல் நிலைய சரகம் வல்லத்தில் அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி சுபாஷ் கண்ணன் என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அருள் ஜோதி