மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று (16/10/24 ) 99வது நிகழ்ச்சியாக மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திருமதி.வினோதினி அவர்களின் தலைமையிலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சேதுமணிமாதவன் மாணவியருடன் கலந்துரைடையாடல் மற்றும் முன்னெச்சரிக்கை பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். பாத்திமா கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. முனைவர்.செலின் சகாய மேரி அவர்களால் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு கல்லூரி மாணவிகளிடம் போதை பொருள் பற்றியும் அதன் ஆபத்துக்கள் விளைவுகள் மற்றும் பெண்கள் எவ்வாறு போதைப் பொருள் பயன்படுத்துவர்களால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது பற்றியும். இளைஞர்களிடம் போதைப் பொருள் பரவிவரும் நிலையில் பெண்களால் எவ்வாறு தடுக்க உதவ முடியும் என்பது பற்றியும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் மற்றும் 2500 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட ரெப்போட்டர் அருள் ஜோதி