மதுரை மாநகரில் கடந்த 12 ம் தேதியன்று இரவு பெய்த கன மழையில் மதுரை காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகதிடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயிவே கருடர் பாலத்தின் கீழ் மழை நீர் அதிகமாக தேங்கியிருந்த நிலையில் அப்பதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்ள் செல்வதை தடுக்கும் பொருட்டு நான்கு சக்கர வாகன ரோந்து காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்து தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் அதை சிறிதும் கவனிக்காமல் TN 48 AP 1213 என்ற காரை ஓட்டி வந்த மதுரை கோச்சடையை சேர்ந்த கோபி என்பவர் மற்றும் காரில் இருந்த ரமேஷ் ஆகியோர் கருடர் ரயிவே இரும்பு பாலத்தை கடக்க முயன்ற போது கார் நீரில் முழ்க தொடங்கியது.
இந்த நிலையில் அதை கவனித்த காவல் கட்டுப் பாட்டு அறை ரோந்து வாகனத்தின் ஓட்டுனர் காவலர் திரு. தங்கமுத்து என்பவர் சத்தம் போடவும் அங்கே இருந்த பொதுமக்களாகிய மணிநகரத்தை சேர்ந்த திரு. கார்த்திக் மற்றும் திரு. சந்திரசேகர் ஆகிய மூவரும் சேர்ந்து விரைவாக பாலத்தின் அடியே பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் இருந்த காரின் கதவுகளை திறந்து அதிலிருந்த ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை கயிறுகள் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர் பின்னர் மேற்படி அவர் ஓட்டி வந்த காரை தீயணைப்பு துறையினரின் உதவீயுடன் நீரிலிருந்து மீட்டனர்.
சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு காருடன் மழை நீரில் மூழ்க இருந்த ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை உடனே மீட்பு செய்த காவலர் திரு.தங்கமுத்து, திரு.கார்த்திக் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் நற்செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் திரு. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் IPS அவர்கள் பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.