தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டலின்படி, பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் தெரியும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மனநோயாளிகளை மீட்டெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் மனநிலை சரியில்லாத இரண்டு பெண்கள் ஒரு சிறுவன் உட்பட 3 நபர்களை தேவாரம், போடி ஆகிய பகுதிகளில் மீட்டெடுத்து, 102 தாய் சேய் ஊர்தியின் மூலமாக ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநரும் சமூக சேவகருமான ரஞ்சித்குமார் காவல்துறையினர் உதவியுடன் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது.இதில் ஒரு பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சைக்கு பின்பு சிறுவனை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.