கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சல் கும்பலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும்போது குண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி, தலைமை காவலர் திரு.ஆதிகேசவலு மற்றும் காவலர்கள் திரு. யேசுதாஸ், திரு.முருகேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ‘வீரவணக்கம் நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, 43-ஆம்ஆண்டு வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி 06.08.2023 அன்று திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு.W.I.தேவாரம்,இ.கா.ப. (DGP.Retd) அவர்கள், முனைவர்.M.S.முத்துசாமி.இ.கா.ப., வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர், அவர்கள், திரு. தெ. பாஸ்கர பாண்டியன். இ.ஆ.ப., திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், திரு.ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், செல்வி.கிரண்சுருதி, இ.கா.ப., ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், திரு.மணிவண்ணன்.இ.கா.ப., வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், டாக்டர்.கார்த்திகேயன்,இ.கா.ப, திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
Dr. சசி மோகன்,இ.கா.ப. ,(Q-Branch) அவர்கள், திரு.அசோக்குமார், இ.கா.ப., (RetdQ-Branch), திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அண்ணாதுரை. நா.ம.உ., அவர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. நல்லதம்பி. ச.ம.உ., அவர்கள், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. தேவராஜி ச.ம.உ., அவர்கள், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வில்வவநாதன். ச.ம.உ., அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.