தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மட்டும் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர்கள் இந்த முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த முழு அடைப்பு காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழக பகுதியான ஓசூரில் இருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மட்டும் முழு அடைப்பு காரணமாக மாநகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அங்குள்ள அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய வழக்கம் போல இயங்குகின்றன பேருந்து சேவைகளும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன