அனைத்து மகளிருக்கு மாதம் 1000 தருவதாக சொல்லிவிட்டு, தகுதியுடையவருக்கு மட்டும் என சொல்கிறார்கள்-திமுக தேர்தல் அறிக்கையில் 100 சதவீதம் நிறைவேற்றியதாக பச்சை பொய் பேசுகிறார் முதலமைச்சர்-தருமபுரியில் எடப்பாடி பேச்சு.
தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில், தருமபுரி மாவட்ட அதிமுக ஜெ.பேரவை செயலாளர் வெற்றிவேல் மகள் திருமணத்தை நடத்தி வைத்து, 100 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். மேலும் 100 ஜோடிகளுக்கும் சீர்வரிசையை வழங்கினார். இதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
இன்று நடைபெற்ற 100 ஜோடி மணமக்களும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கிறேன். அதிமுக என்பது கழகம் ஒரு குடும்பம் என்பதற்கு இதுவே சான்று. இது அதிமுகவில் மட்டுமே நடைபெறும். அதிமுக ஜாதி, மாதத்திற்கு அப்பாற்பட்டது. நாம் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது பொறுத்துக் கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கற். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் திமுக தலைவர் தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகளை திமுக ஏமாற்றி வாங்கி வந்தது. தற்போது நாம் அதை வாங்கி விடுவோம் என்ற அச்சம் வந்துவிட்டது.
மேலும் நீட் தேர்வு குறித்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதி பேசி வருகின்றனர். ஆனால் நீட் தேர்வு கொண்டு வந்தது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010 டிசம்பர் மாதம், காந்திச்செல்வன் மத்திய சுகாதார துறை இணையமைச்சராக இருந்த போது, பிள்ளையார் சுழி போட்டார்கள். இன்று எதிர்ப்பது, திமுகவும், காங்கிரஸும் தான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக்கூடாது என திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 இலட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால் இந்த லிடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் நிறுத்தி விட்டார். அதேப்போல் கருவுற்ற பெண்களுகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மக்களின் வசதிக்காக 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்டபட்டது. வேலைக்கு செல்லும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு அதிக சுழல் நிதி அதிமுக வழங்கியது. அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள்.
ஏழை பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அதிமுக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, சுமார் 2000 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். மேலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தியது. ஏழை மக்களின் ஏற்றத்திற்காக அனுப்பு தான் அதிமுக ஆட்சி. தைப் பொங்கலுக்கு ஏழைகள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 2500 பணத்துடன், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் திமுகவில் ஒழுகும் வெல்லத்தை கொடுத்தார்கள். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தவர்கள் தான் திமுக. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் வினியோகம் செய்யப்படுகிறது. திமுகவின் தேர்தலில் 520 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனாலு 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் பச்சை பொய் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். அதுவும் முழுமையாக சேரவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேர்மையாக போராடுகிற விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அமைச்சர் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஸ்டாலின், உதயநிதி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. திமுக அமைச்சரவையில் இருக்கும் ஒரு நிதியமைச்சரே சொல்லியுள்ளார். திமுக ஊழல் செய்வதற்காகவே வந்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். திமுக குடும்ப ஆட்சி. முன்பு கலைஞர் முதலமைச்சர், பிறகு ஸ்டாலின் வந்தார். தற்போது உதயநிதியை முதலமைச்சராக்க போகிறார்கள். இது நடக்காது. திமுகவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகளுக்கு வாய்ப்பில்லை. இதுதான் குடும்ப ஆட்சி. அடுத்த தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட செய்தியாளர்
T.M. பாண்டியன்