இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஹமித்
ஃபிரோஜ் அவர்களும் மாநிலத் செயற்குழு உறுப்பினர் S. கே அஸ்கர் அலி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
தலைவராக
R.ஷபியுல்லா அவர்களும்
பொதுச்செயலாளராக B.ஷப்பீர் அஹமத் அவர்களும்,
மாவட்ட துணைத் தலைவர்களாக
ஷாநவாஸ் அவர்களும்,
மாவட்ட செயலாளராக
M. ஜாவித் அவர்களும்
மாவட்ட செயலாளராக சௌத் அகமது அவர்களும்
மாவட்ட பொருளாளராக
அப்துல் கலிம் அவர்களும்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக A . R இம்ரான் அவர்களும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தங்களது பணி சிறந்து விளங்கவும் தேச முழுவதும் படர்ந்து விரிந்து இருக்கும் இக்கட்சியை சிறந்த முறையில் கட்டமைத்து தேசத்திலேயே சிறந்த மாவட்டமாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை நிர்வகிக்க வல்ல இறைவன் என்றென்றும் உதவி புரிவானாக என்று பிராத்தித்து வாழ்த்துகிறேன்.
தீர்மானம்(1)
ஓசூரில் பிரதான சாலையாகிய பாகலூர் ரோட்டில் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் குண்டும் குலியுமாக உள்ளது உயிர் சேதம் ஏதேனும் நிகழ்வதற்கு முன்பாக சாலையை சீரமைத்து தருமாறு நெடுஞ்சாலைத்துறைக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இப் பொது குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
தீர்மானம் (2)
ஓசூர் மாநகராட்சி என்கின்ற மாபெரும் அந்தஸ்து கிடைக்கும் அதற்கு நிகரான வரிகள் மக்கள் இடத்திலே பெற்ற பின்பும் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சிக்கு நிகரான போதிய வசதிகள் மக்கள் பெறாத ஒரு சூழ்நிலை நிலவுகின்றது எனவே மாநகராட்சி விரைந்து மக்களுக்கான சாலை வசதிகள் சீரான குடிநீர் சாக்கடை வசதி போன்ற அனைத்து தேவைகளையும் உடனடியாக செய்து கொடுக்க இப்பொது குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் (3)
ஓசூர் மாநகரத்தை பொருத்தவரை தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது ஆனால் இங்குள்ள பெரும்பான்மையான தொழிற்சாலைகளில் தமிழர்களை விடவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை விடவும் அதிக அளவில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் எனவே தங்களுடைய மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நம்பி வாழ்கின்ற மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர் எனவே மாநகராட்சி நிர்வாகமும் ஓசூரின் சட்டமன்ற உறுப்பினரும் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இந்த விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவித்து தமிழகத்தின் தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமளவில் பணி நியமனம் செய்ய சிறப்பு தீர்மானம் சட்டமன்றத்தின் நிறைவேற்ற வேண்டும் என்று இப் பொது குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்(4)
மின்வாரியத் துறை என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு துறையாகும் ஆனால் சமீப காலமாக ஓசூர் மின் வாரியம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் மின்சாரம் துண்டிப்பது என்றும் அதேபோல மாதம் ஒரு முறை மின்சார பரிமாண சம்பந்தமாக ஒரு நாள் முழுவதும் மின்சாரம் துண்டிப்புக்கப்படும் நாளில் சில மாதங்களாக அதனையும் வெள்ளிக்கிழமைகளில் மின்சாரம் துண்டிக்கின்றனர் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது எனவே இவ்விஷயத்தில் மின்வாரியம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று இப் பொது குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம் (5)
ஓசூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளூர்வாசிகள் வெளியூர் வாசிகள் கிராமவாசிகள் என பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்லக்கூடிய ஒன்றாகும் இந்நிலையில் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே இருந்த பயணிகள் நிழல் கூட பஸ் நிறுத்தம் அகற்றப்பட்டுள்ளது மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை எளிய பெண்கள் வயதானவர்கள் மழைக்காலங்களில் வெயில் காலங்களிலும் நிழல் கூடம் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை நிலவி வருகின்றது எனவே பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் அதே இடத்தில் பயணி நிலக் கூட்டம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்(6)
தேன்கனிக்கோட்டை நகரத்தை சுற்றி அடர்ந்த காடுகளின் மத்தியில் இருக்கக்கூடிய ஒரு நகரமாகும் இதனால் காட்டுப் பகுதியில் இருந்து வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து விலைப் பயிர்களை சேதப் படுத்துவதும் உயிர் பலிகள் ஏற்படுவதும் தொடர் கதையாக இருக்கின்றது எனவே வனத்துறையினர் வனவிலங்குகள் நகரத்திற்குள் வராத வண்ணம் அதற்கு தகுந்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு இப் பொது குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்(7)
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியின் சார்பாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் மக்கும் மக்காத குப்பைகளை எடுத்துச் சென்று காட்டுப் பகுதிகளில் போடக்கூடிய ஒரு சூழல் இருக்கின்றது இது மிகவும் கண்டனத்திற்குரியது தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மூலம் மக்கும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் கிடங்கினை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று இப் பொது குழு வலியுறுத்துகின்றது.