பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் 174 தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மழைக்காலத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நடந்தது. மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் குருநாதன் தலைமையிலான மருத்துவர் குழு மற்றும் செவிலியர்கள் தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்தனர். மேலும் பொது மருத்துவம் மற்றும் மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் நோய் வராமல் இருப்பதற்கான ஆலோசனைகளும், தூய்மை பணியின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தகுந்த மருந்துகளும் பரிசோதித்து வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் நெடுமாறன், ஆய்வாளர்கள் அறிவழகன், மகாமுனி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்களும், தூய்மை பணியாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்
A. பிரபு