ஈரோடு மாவட்டம் , நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் அந்தியூரில் உள்ள பிருந்தாவன் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் அனைத்து நீதிபதிகள், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் ஐபிஎஸ், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜரண வீரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, பவானி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதுவிலக்கு பிரிவு சண்முகம் மற்றும் அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, காவல் உதவி ஆய்வாளர் தனபால், அமுதா மற்றும் பிற காவல் ஆய்வாளர்கள், காவலர்களுடன் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு பற்றி தெரிந்து கொண்டு போதையில்லா சமுதாயத்தை உருவாக்க தங்களின் பங்களிப்பு இருக்கும் என்று உறுதி ஏற்று கொண்டனர் .
காவலர் ரிப்போர்ட் செய்திகளுக்காக
ஈரோடு மாவட்ட செய்தியாளர்
சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.