
ஓசூரில் SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக LEAD தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது
SDPI கட்சியின் சார்பில் தேசம் தழுவிய அளவில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு Leadership Education And Development (LEAD) என்ற தலைப்பில் நடைபெறும் “தலைவர்கள் சங்கமம்” தலைமைத்துவ பயிற்சி முகாம் ஓசூரில் A1 மஹாலில், மாவட்டத் தலைவர் R.ஷபியுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் SDPI மாவட்ட பொதுச் செயலாளர் B.ஷப்பீர் அஹமத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் ஜாவித் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ஆசாத் அவர்களும், SDPI கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் H.அஸ்கர் அலி அவர்களும் கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி வகுப்பெடுத்தனர்.
SDPI கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் கலீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான், தலி தொகுதி தலைவர் பாரூக் அஹமத், ஓசூர் தொகுதி தலைவர் இம்தியாஸ் வேப்பனப்பள்ளி மேற்கு தொகுதி தலைவர் சமீர், ஓசூர் மாநகர, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் நகர நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஷாநவாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.