* கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கடந்த ஒரு மாதத் தில் குட்கா விற்பனை செய்ததாக 15 பேரை கைது செய்த போலீசார், குற்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக, கர்நாடக, ஆந்திர ஆகிய 3 மாநில எல்லையை கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக நாள்தோறும் கர்நாடகா, ஆந்திர மாநி லங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான வாக னங்கள் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளுக்கு வருகின்றன. அதே போல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் ஆந்திரா, கர்நாடகா, மற் றும் வட மாநிலங்களுக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்கின்றன. இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வந்தன. அதை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில், தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா விற்பனை, குட்கா, லாட்டரி, சூதாட்டம், மதுபானங்கள் கள்ளத்தனமான விற்பனை செய்பவர்கள், விபசார தொழிலில் ஈடுபடுபவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்பனை செய்த மற்றும் கடத்திய பேர் மீது448.410 கிலோ குட்கா. 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாட்டரி விற்பனை செய்த தாக 15 பேர் மீது 12 வழக் குகளும், அரசு மதுபானங் கள் விற்பனை செய்த 441 பேர் மீது 441 வழக்குகளும், 1259 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன…கஞ்சா விற்பனை, குட்கா, லாட்டரி, சூதாட்டம், மதுபானங்கள் கள்ளத்தனமான விற்பனை, விப சார தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்பனை செய்த மற்றும் கடத்தியதாக 15 பேர் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ₹3 லட்சத்து 70 ஆயிரத்து 888 மதிப்புள்ள 448.410 கிலோ குட்கா, 4 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. லாட்டரி விற்பனை செய்ததாக 15 பேர் மீது 12 வழக்குகளும், அரசு மதுபானங்கள் விற்பனை செய்த 441 பேர் மீது 441 வழக்குகளும், 1259 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. மேலும், மணல் கடத்தியதாக 17 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய் யப்பட்டு 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 42 பேர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ₹14,400 மற்றும் 10 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. மேலும் கஞ்சா விற்பனை செய்ததாக வும், கடத்தியதாக 6 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ₹4700 மதிப்புள்ள 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. மேலும்,விபச்சாரத் தொழில்நடத்திய 2பேர் மீது2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்து வருபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை மேற் கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறை சார்பில் நடவ டிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் 59 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ண கிரி மாவட்ட எஸ்.பி.தங்கதுரை அவர்கள் கூறுகையில், ‘கிருஷ்ண கிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களான கஞ்சா, குட்கா, லாட் டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங் கள் விற்பனை, விபசார தொழிலில் ஈடுபடுபவர் கள் பற்றி தகவல் தெரிந் தால் 24 மணி நேர மும் காவல் துறைக்கு 94981- 81214 என்ற எண்ணின் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தகவல் தெரிவிக் கலாம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாக இருக்கும் என்று கூறினார் ….கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் T.சாமுவேல்