சேலம் அரிசிபாளையம் நாகலிங்கம் தெருவை சேர்ந்த கவிதா மகள் தீபிகா தனியார் ஹோட்டலில் பணிபுரிகிறார். இவருக்கும் ஹோட்டல் மேலாளருக்கும் இடையே கடந்த 6 ந்தேதி தகராறு ஏற்பட்டது. அதில் மனம்உடைந்த தீபிகா ஹோட்டலில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. கவிதா எங்கு தேடியும் காணாததால் பள்ளப்பட்டி போலீஸ் நேற்று புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தீபிகாவை தேடி வருகின்றனர். இதேபோல் கருப்பூர் தேக்கம்பட்டியை சேர்ந்த பரிமளா மகள் அனுஷா தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 7 ந்தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. பரிமளா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் நேற்று கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அவரின் புகார்படி கருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
