
சேலம் மதுவிலக்கு போலீசார் ரெட்டியூர், மல்லமூப்பம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த அழகாபுரத்தை சேர்ந்த சுவர்ணம் (58), சூரமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோன்று கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற மாதேஷ் (66) என்பவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.ஓமலூர் போலீசார் பெரமச்சூர், காமலாபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற புளியம்பட்டி விஜயகுமார்(47), திருச்சி மணசூலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(66) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.