கோவை
என்.ஜி.ஜி.ஓ காலனி அசோகபுரம்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்து கொண்ட பள்ளி ஆசிரியர்
அபிநயா மற்றும் #ராஜ்குமார் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் வலியுறுத்தி
SDPI கட்சி கோவை மாவட்ட தலைவர் A.முஸ்தபா அவர்கள் தலைமையில்
மாவட்ட ஆட்சியர் க்ராந்தி பேடி அவர்களை சந்தித்தனர்.
நாம் கூறிய அனைத்து புகார்களையும் கேட்ட மாவட்ட ஆட்சியர் கூறுகையில்
“”தற்போது அந்த ஆசிரியர்_அபிநயா பணியிடை நீக்கம் செய்யபட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கல்வி முதன்மை அதிகாரி (CEO) தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.””
மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தபட்டு தவறு நடந்திருப்பது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் இது போன்ற செயல்கள் கோவை மாவட்டத்தில் நிகழாமல் தடுக்கவும் மதபாகுபாடுகள் இன்றி பள்ளிகள் இயங்க அனைத்து பள்ளிகளிலும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று கூறினார்.
சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்துடன் வந்திருந்தார்.
மேலும் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் இசாக், பொருளாளர் இக்பால், SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் பலர் உடனிருந்தனர்: