ஈரோட்டில் தமிழ் உலகம்அன்ன லக்ஷ்மி அன்னதான திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை எதிரில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதான திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டிவழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டு 138 வாரம் சிறப்பு அன்னதானத் திட்டமாக நோயாளிகளுக்கும் மகப்பேறு சிகிச்சை பெறும் மகளிர்களுக்கும் சாலையோர பயணிப்போருக்கும் சுமார் 100 க்கும் மேற்பட்டோர்களுக்கு காலை சிற்றுண்டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் இனிப்பு பாக்கெட் வழங்கப் பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சியில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதானத் திட்டத்தின்
தலைமை நிர்வாகி
டி.ராமலிங்கம், ஆர்.மோகனபிரியா ராமலிங்கம், ஆர்.ஸ்ரீ வர்ஷன் தலைமையில்
வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு சம்பத்நகர் ரவீந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.