
சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார். இவர் குறிஞ்சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டிக்கடையில் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் மாரியப்பன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.