மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழையால் மதுரை மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.. மேலும் மதுரையின் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காளவாசல் இருப்பதால் பொது மக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சந்தனகுமார் தலைமையிலான போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சர்க்கரை மற்றும் பாஸ்கரன் ஆகியோர்
குண்டும், குழியுமான காணப்பட்ட சாலையை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த ஆர்வமிக்க மக்கள் நலன் கருதிய இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி