பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்து விடுவேன் என்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மிரட்டல் விடுத்து, பொது அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :
பா.ஜ.கட்சியை தடை செய்யுமாறு கண்டன முழக்கம் :
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 18.9.23 ல் இந்து முன்னணி கட்சியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்பட்டு பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. பெரிய குளம் வட கரை அம்பேதகர் சிலை அருகே ஊர்வலம் வரும் போது ஊர்வலத்தில் பங்கேற்ற சமூக விரோதிகள் சிலர் அம்பேதகர் சிலையை இடித்து, உடைத்து அப்புறப்படுத்துவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக வி.சி.க சார்பில் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, புகார் மனு மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெரியகுளம் வி.சி.க நகர செயலாளர் ஜோதிமுருகன தலைமை தாங்கினார். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ. ரபீக், தென் மண்டல செயலாளர் இரா.தமிழ்வாணன் முன்னாள் மாவட்ட செயலாளர் ப. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வி.சி.க தலைமை நிலைய செயலர் ஏ.சி.பாவரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பெரியகுளத்தில் பொது அமைதிக்கு ஊரு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சியினை தடை செய்ய வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பப்பட்டது இந்நிகழ்வில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, வடுகை ஆண்டவர், மாவட்ட அமைப்பாளர் தொல். தளபதி, தொழிலாளர் விடுதலை இயக்க மாநில செயலாளர் தமிழன்,நகர துணைச்செயலாளர் தலித் தர்மா, செல்வராசு, மூர்த்தி, சேகுவாரா, கள்ளி முருகன், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.