இன்று (27.08.2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதிச் சட்டம் 2015 ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) தொடர்பாக ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எடுக்கப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. வெங்கடகிருஷ்ணன் (IUCAW), செல்வி.சந்திரலேகா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி ப.அனுசியா குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு.வேதநாயகம் இளைஞர் நீதி குழும உறுப்பினர் நன்னடத்தை அலுவலர் வழக்கறிஞர் செல்வி. பவித்ரா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை காவலர்கள் கையாளும் விதம் பற்றியும், சட்டரீதியாக குழந்தைகளுக்கு உதவி செய்வது பற்றியும், இளைஞர் நீதிச் சட்டம் 2015 நடைமுறைகளைப் பற்றியும் மற்றும் குழந்தைகள் நல குழுவிற்கு முன் ஆஜர்படுத்தும் குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதைப் பற்றியும் மாவட்டத்தில் பணிபுரியும் குழந்தைகள் நல காவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது