தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள அனைத்து சமுதாய தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மாணவிகளைக் கொண்டு உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, அரிசி மாவு ,திணைமாவு, பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரித்த உணவு பண்டங்கள் மாணவ மாணவிகளுக்கு சிறிய விற்பனை தொகை மூலம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் தனியார் கல்லூரியின் தாளாளர் தர்வேஷ் முகைதீன் மற்றும் கல்லூரி முதல்வர் முகமது மீரான் முன்னிலையில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். மேலும் கல்லூரியின் அனைத்து துறை ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்…..