ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டமீறல்களை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, பல முக்கியமான நெத்தியடிகளைக் கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வரும் நிலையில், அதன் கொட்டத்தை அடக்கும் வகையிலான தீர்ப்பை பெற்று, ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் மொத்த நாட்டுக்கும் வழி காட்டியிருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. 414 பக்கங்களை கொண்டிருக்கும் தீர்ப்பு, கூட்டாட்சியை வலுப்படுத்தும் தி.மு.க.வின் வரலாற்றில் முக்கியப் பங்கை இனி வரும் காலங்களில் நிச்சயம் வகிக்கும்.
தீர்ப்பின் முக்கியமான கருத்துக்கள் இவை தான்:
1. இனி காலம் தாழ்த்த முடியாது:
அரசமைப்புச் சட்டத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கென ’as soon as possible’ என்பதற்கான கால வரையறையை நிர்ணயித் திருக்கிறது உச்ச நீதிமன்றம். மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என தீர்மானிப்பதற்கு என குடியரசு தலைவருக்கு மூன்று மாத கால வரையறையை நிர்ணயித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த கால வரையறை என்பது மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய நாளிலிருந்து தொடங்கும்.
2. உச்சநீதிமன்றத்துக்கு பொறுப்பு:
மசோதாக்களை முடக்கும் வகையில் ஆளுநரோ குடியரசுத் தலைவரோ காலம் தாழ்த்துவதை தடுக்கும் பொருட்டு, தேவைப்பட்டால் உச்சநீதிமன்றமும் தலையிடும் என தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்க
